follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடு"ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது" - சஜித்

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

Published on

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது என தெரிவித்திருந்தார்.

முழுமையான கடிதம்;

அதிமேதகு மொகமட் மொக்பர்
பதில் ஜனாதிபதி
ஈரான் இஸ்லாமிய குடியரசு.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியும் ஈரான் மக்களின் அன்புக்குரிய தலைவருமான அதிமேதகு இப்ராஹிம் ரைசி அவர்களின் அகால மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமேதகு ரைசி அவர்கள் தனது தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவு, ஆற்றலினால் தனது நாடு மற்றும் மக்கள் மீது காட்டிய ஆழ்ந்த அன்பு அத்துடன் அவர் தனது கடமைகளைச் செய்த சிந்தனைத் தன்மை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிறந்த தலைவராக இருந்தார்.

இந்த சோகம் ஈரானுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை பிரதிபலிக்கிறது. ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது.

ஈரானின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாற்றில் ஈரானியர்கள் நிறைய பொறுமையுடன் வாழ்ந்துள்ளனர். மேலும் அன்னாரின் மறைவுக்குப் பின்னர் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவரிடமிருந்து உறுதியான மற்றும் அசைக்க முடியாத தலைமை தேவையான தருணமிது. துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் தேவையான வழிகாட்டுதலை அவர் நிச்சயமாக வழங்குவார்.

மேதகு இப்ராஹிம் ரைசி சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார், இலங்கையும் எனது மக்களும் அவரது அன்பான முகத்தை நேரடியாகப் பார்க்க முடிந்தது.

மிகவும் இக்கட்டான இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் ஈரான் மக்களுடன் நமது எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் நாம் ஐக்கியமாக இருப்போம்.

பாரசீகர்களின் வரலாற்றில் அழியாத நினைவைக் குறிக்கும் அன்னாரது நீடித்த மரபுரிமையில் ஈரானியர்கள் ஆறுதல் பெறட்டும்.

சஜித் பிரேமதாச (பா.உ.)
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...