follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

ஒமிக்ரான் எச்சரிக்கை : கதவுகளைத் தொடர்ந்து மூடும் அவுஸ்திரேலியா!

Published on

புதிய கொவிட் திரிபு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், வெளிநாட்டவர்களுக்கு தமது எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவுஸ்திரேலிய வீசாவுடன் வெளிநாடுகளில் தங்கியிருப்போருக்கு இன்று முதல் (டிசம்பர் 1) எல்லைகளைத் திறப்பதாக அவுஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுள்ள ஐந்து பேர் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளைத் திறக்காதிருப்பதற்கு அவுஸ்திரேலிய தீர்மானித்துள்ளது.
புதிய திரிபு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எல்லைகளை மீளத் திறக்கும் தீர்மானத்தை, குறைந்தது 15 நாட்களுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்ற உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டவர் உள்நுழைய தடை விதிப்பதாக ஜப்பான் நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்...

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர்...

அமெரிக்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு மேலதிக வரி

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...