follow the truth

follow the truth

May, 1, 2025
Homeலைஃப்ஸ்டைல்குழந்தைகளின் நடத்தையை மாற்றும் செல்போன்கள்

குழந்தைகளின் நடத்தையை மாற்றும் செல்போன்கள்

Published on

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.

செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்

நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதுதவிர, தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...