இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, அதில் மேலும் குறிப்பிடுவதாவது :