follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்இலங்கையர் கொலை: 100 பேர் கைது

இலங்கையர் கொலை: 100 பேர் கைது

Published on

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  இலங்கையர் தொடர்பான,  பல தகவல்கள் வெளியாகியுள்ளன.கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்ததுடன், 2012இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொதுமுகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.

தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...

சில மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை...

தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு

தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச...