தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவரும் சம்பவமான மௌலவி ஒருவர் பெண்ணின் தலை முடியை வெட்டிய சம்பவம் தொடர்பிலான உண்மைத்தன்மை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவினரிடம் டெய்லி சிலோன் வினவினோம்.
கண்டி – வத்தேகமவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் நேற்று (12) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அதே பேரூந்தில் முன் இருக்கையில் இருந்த இளம்பெண்ணின் 4 அடி நீளமுள்ள தலைமுடியின் ஒரு அடியை கத்தரிக்கோலால் வெட்டியிருக்கிறார்.
பின்னர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இதனைக் கண்ட பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, அவரிடம் கத்தரிக்கோல் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. யுவதியின் தலைமுடியை வெட்டியதையும் மௌலவி ஒப்புக்கொண்டார்.
பின்னர் இன்று (13) குறித்த மௌலவியை கண்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.