follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1ஜனாதிபதியின் வெற்றியை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் சேறு பூசுகின்றனர்

ஜனாதிபதியின் வெற்றியை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் சேறு பூசுகின்றனர்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியினை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் மேடைகளில் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு அதிகாரத்தை பெற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அன்று ரணில் சவாலை ஏற்காமல் இருந்திருந்தால், இலங்கை இன்று இருக்கும் நிலையில் இருந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

‘ஜயகமு’ கம்பஹா பொதுச் சபையில் உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திற்கே இன்றைய தினம் விசேட தினமாகும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவரது இரண்டு வருட நிறைவு விழா கம்பஹாவில் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று இந்த மேடைகளைப் பார்க்கும்போது, ​​அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் உள்ளனர். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே அவர்கள் தங்கியிருப்பதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ்,...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...