follow the truth

follow the truth

May, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் - இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்

Published on

பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல், தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமருடைய ஆட்சி பலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து விஷவாயுகளை விசிறி படுகொலைகளை முன்னெடுத்தார். அன்று ஹிட்லர் செய்தது தவறு போலவே இன்று இஸ்ரேல் செய்து வருவதும் தவறாகும். இந்தத் தவறை தவறாக பார்க்க வேண்டும்.

இங்கு ஒரு நாடாக நாம் முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டு தனித் தீர்மனாத்தை எடுத்து செயற்பட வேண்டும். பாலஸ்தீன மக்களும் இஸ்ரேல் அரசும் அடுத்தடுத்து இரு நாடுகளாக ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடனும் நட்புடனும் வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். இதற்கு ஆதரவாக முன்நிற்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 354 ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன, கண்டி, செங்கடகல, பாததும்பர, கடுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரி வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யார் தவறு செய்தாலும் அதைத் தவறாகப் பார்க்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்காக நான் முன்நிற்பேன். பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐ.நா பொதுச்சபை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட ஒஸ்லோ மற்றும் ஜெனிவா ஒப்பந்தங்கள் பல காணப்படுகின்றன. உலகத்தில் என்று இருந்தாலும் சரி, நமது நாட்டில் என்று இருந்தாலும் சரி, தீவிரவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது. நடுத்தர பாதையிலும் சரியான பாதையிலே நாம் பயணிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் மக்கள் சார் உரிமைக்காகவும், அவர்களனது தாயகத்தின் மீதான உரிமைகளுக்காகவும் நாடாக நாம் முன்நிற்போம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...