“ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு ஒன்றிற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதும், நீதிமன்ற வளாகத்திலிருந்து திரும்ப அழைத்துச் செல்லப்பட்டபோதும், டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் குறித்து ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், 15.05.2025 அன்று விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.