follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1காருக்குள் கஞ்சா வைத்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம்

காருக்குள் கஞ்சா வைத்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம்

Published on

பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது காருக்குள் போதைப்பொருள் பார்சலை வைத்து இளைஞர்கள் குழுவை கைது செய்ய முயன்றதாக டெய்லி சிலோன் வெளியிட்டிருந்த காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவிற்கு அமைய, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பதுடன் அவரும் மற்றுமொரு அதிகாரிகள் குழுவும் ஆனந்த குமார சுவாமி வீதிக்கும் கேணல் டி.ஜெயா மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், காரில் கஞ்சா போதைப்பொருளை வைத்து சோதனையிடப்பட்டு அந்த காரில் வந்தவர்களை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதன்படி, உத்தியோகபூர்வ ஆடைகளை அணிந்து வெற்றிலை பாக்கு உண்டமை, சாரதி அல்லது வாகனத்தில் பயணிக்காத வேறு நபர் மற்றும் உதவி உத்தியோகத்தர் இல்லாமல் வாகனத்தை சோதனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பில் இருந்து குறித்த காணொளியை நீக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் டெய்லி சிலோன் பிரிவுக்கு பாதித்த தரப்பு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...