ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (30) மாலை 5.30க்கு கொழும்பு 01, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதில் ஆளுங்கட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.