follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2மூன்றாம் உலகப்போர்.. அடித்தளம் போட்ட இஸ்ரேல்

மூன்றாம் உலகப்போர்.. அடித்தளம் போட்ட இஸ்ரேல்

Published on

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது.

இதனால் விரைவில் மூன்றாம் உலகப்போர் உருவாகும் சூழல் எழுந்துள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா.

இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் பலியானார்.

இதற்கு அடுத்த நாளே ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. ஹமாஸில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பலர் இருந்தாலும், இஸ்மாயில் ஹனியே மிதவாதியாக அறியப்படுகிறார். இவருடைய குழந்தை பருவம் அகதிகள் வாழ்க்கையிலிருந்துதான் தொடங்கியது. ஹமாஸின் மற்ற தலைவர்களுடன் ஒப்பிடாமல், இவரை காசா மக்கள் தனி மரியாதையுடன் பார்த்து வந்தனர். குறிப்பாக போரை நிறுத்த இவர் மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் காசா மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

இப்படி இருக்கையில் இவரது படுகொலை, மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஐநாவும், மத்திய கிழக்கின் நட்பு நாடுகளும் பாலஸ்தீன போர் நிறுத்தம் குறித்து ஹமாஸிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இதன் விளைவாக போர் நிறுத்தம் ஏறத்தாழ சாத்தியமாகும் நிலையில் இருந்தது. இப்படி இருக்கையில், மேற்குறிப்பிட்ட இரண்டு படுகொலைகள் லெபனான், பாலஸ்தீனம் மற்றும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...