follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பந்துல லால் பண்டாரிகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

பந்துல லால் பண்டாரிகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

Published on

பந்துல லால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...