follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு

ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு

Published on

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்று உள்ள பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர் மீது பங்களாதேஷில் காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இதை அடுத்து அவர் எப்போது பங்களாதேஷிற்கு திரும்பினாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக பங்களாதேஷில் கலவரங்கள் நடைபெற்றன. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலியானார்கள். அந்த கலவரத்தின் போது ரபிக்குல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அது குறித்த வழக்கு ஒன்று அடாபூர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் இறப்பதற்கு முன் பல்வேறு பெயர்களை கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் சுமார் 156 நபர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹசன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கலவரத்துக்கு முன்பு வரை பங்களாதேஷத்தை ஆண்ட ஆவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன். அந்த காரணத்துக்காக பழி வாங்கும் நடவடிக்கையாக அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், தற்போது பாகிஸ்தானில் இருக்கும் அவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாட்டுக்கு திரும்புமாறு பங்களாதேஷத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக அரசு அறிவுறுத்தலாம்.

மேலும். அவர் பங்களாதேஷத்திற்கு எப்போது வந்தாலும் அவரை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கும் நிலையில், ஷகிப் அல் ஹசனும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வேறு நாட்டுக்கு சென்று தலைமறைவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நாடுகள் அவருக்கு அடைக்கலம் கொடுக்காமல் இருக்கவே அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...