எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேரூந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
“பல வருடங்களாக விலைச்சூத்திரத்தின் கீழ் இயங்கி வருகிறது. விலைச்சூத்திரத்தின்படி 10 ரூபாய் மாற்றம் 4 சதவீதத்தை எட்டவில்லை. எனவே இம்முறை பேரூந்து கட்டணம் திருத்தப்படாது.”