follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1350 அடிப்படை சம்பளம் - செந்தில் தொண்டமான் நன்றி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1350 அடிப்படை சம்பளம் – செந்தில் தொண்டமான் நன்றி

Published on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மீதி 350 ரூபாயும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...