follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது - டிரம்ப்

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது – டிரம்ப்

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்க கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், டொனால்டு டிரம்ப், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸின் வேண்டுகோள் செவ்வாய்க்கிழமை விவாதத்தில் அவர் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டுகிறது. அதை சரி செய்வதற்கான மீண்டும் ஒரு விவாதத்தை எதிர்நோக்குகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது பொருளாதாரம், குடியேற்றம், கருக்கலைப்பு தடை ஆகியவற்றை பற்றி இரண்டு பேரும் காரசார விவாதம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவை சீர்குலைத்தவர். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் என டொனால்டு டிரம்ப்-ஐ கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார்.

அதேவேளையில் கமலா ஹாரிஸ் ஒரு மார்சிஸ்ட். அவர் இஸ்ரேலை வெறுக்கிறார் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...