கடும் மழை காரணமாக ஆறு நாட்களாக மூடப்பட்டிருந்த நாத்தாண்டிய தங்கொடுவ ஊடாக நீர்கொழும்பு பிரதான வீதி சில இடங்களில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்னும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் இன்னும் வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
வேலைக்குச் செல்வது உட்பட அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.