follow the truth

follow the truth

November, 10, 2024
Homeஉள்நாடுHPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

Published on

களுத்துறை – அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குருவத்தோட்ட – வெனிவேல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும், 5 மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 26 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதில் 5 மாணவிகள் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்குருவத்தோட்ட பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டு சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட மாணவர்களை ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அங்குருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த சில்வாவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின் கட்டணம் 30 வீதத்தினால் குறைக்க திட்டமிட்டுள்ளோம்

மின் கட்டணத்தை 30 வீதத்தினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய...

பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை

எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும்...

திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது...