இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Airbus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 ஊழியர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.