follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுடக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

Published on

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு போலியான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது சட்டத்தரணி, தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...