ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப் பட்டியல் எம்.பி பதவிகளை வென்றதுடன், இதுவரை ஒரு எம்.பி பதவியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உரிய காலத்தில் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.