follow the truth

follow the truth

December, 13, 2024
Homeவணிகம்நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்காக 'Suwamaga' : நடமாடும் சேவையை அறிமுகப்படுத்தும் Union Assurance

நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்காக ‘Suwamaga’ : நடமாடும் சேவையை அறிமுகப்படுத்தும் Union Assurance

Published on

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாகத் திகழும் Union Assurance, அண்மையில் தனது ‘Suwamaga’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு தீர்வு காணும் நோக்கில் ‘Suwamaga’ நிகழ்ச்சித்திட்டத்தை Union Assurance இன் முன்னணி சமூக நலத்திட்டமாகவும் குறிப்பிடலாம்.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் 2024 நவம்பர் 27ஆம் திகதி நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை சமூகங்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்த விசேட நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டார்.

‘Suwamaga’ நடமாடும் பிரிவு இத்திட்டத்தின் தனிச்சிறப்பு அம்சமாக குறிப்பிடலாம். இலவச நீரிழிவு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியுடன் கூடிய டிரக் வண்டி, இலங்கை நீரிழிவு சங்கத்தின் சான்றளிக்கப்பட்ட சேவை நிபுணர்களால் இயக்கப்படுகிறது. சுகாதார அபாயங்களை நிர்வகித்தல் மற்றும் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு விரிவான சுகாதார அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கவும் இந்த பிரிவு செயல்படுகிறது.

Union Assuranceஇன் இந்த தனித்துவமான சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர்;

“இன்று இலங்கையில் காணப்படும் மிகவும் சிக்கலான சுகாதாரப் பிரச்சினையான நீரிழிவு நோயை ஒழிப்பதற்காக ‘Suwamaga’ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை ஆரம்பித்த Union Assurance நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகையான நிகழ்ச்சிகள் மூலம் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நிறுத்தாமல் தேவைப்படுபவர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவது மிகவும் அவசியம். குறிப்பாக பொதுமக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதில் தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இந்த கூட்டாண்மை தெளிவாக பிரதிபலிக்கிறது.” என தெரிவித்தார்.

May be an image of 3 people, dais and text

அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மொபைல் பிரிவு இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் சேவைகளை வழங்கும், சுகாதார வசதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை வழகுவதை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், Union Assurance பிராண்டின் ‘தேவைகளைப் பாதுகாப்பதன் மூலம் மனித முன்னேற்றத்தை மேம்படுத்துதல்’ மற்றும் அதன் ‘உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல்’ என்ற அதன் நோக்கத்துடன் நன்கு ஒத்துப்போகிறது.

இலங்கையில் நீரிழிவு நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இரகசியமல்ல. சுமார் ஒவ்வொரு 10 வயதானவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதற்கு சிறந்த சான்றாகும். மேலும், பலர் தாங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என இதுவரை அடையாளம் கண்டுகொண்டில்லை மற்றும் ஏனையவர்கள் நீரிழிவு நோய்க்கு இலக்காகும் அபாயத்தில் உள்ளனர். நீரிழிவு நோயைக் கண்டறிய சிறந்த வழி உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். ‘Suwamaga’ நடமாடும் பிரிவு இரத்த சர்க்கரை அளவை சரிபார்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தேவையான சுறுசுறுப்பான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நடமாடும் பிரிவு மருத்துவ சேவைகளை எளிதில் அணுக முடியாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்கும். ஆரோக்கியமான இலங்கைக்கான இந்த அர்ப்பணிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதில் பெரும் பலமாக இருக்கும்.

May be an image of 12 people and text

இது தொடர்பாக கருத்து தெரிவித்த Union Assuranceஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி , ‘Suwamaga’ நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம், நீரிழிவு நோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்குமென நாங்கள் நம்புகிறோம். அவர்களின் உடல்நிலையை கட்டுப்படுத்த தேவையான ஊக்குவிப்பு மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான சேவைகள் இந்த நடமாடும் பிரிவின் மூலம் நேரடியாக வழங்கப்படுகின்றன. அனைத்து இலங்கையர்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் முழுமையாக புரிந்துகொண்டுள்ளோம் என்பதுடன், எமது கூட்டாண்மை நோக்குக்கு ஏற்ப அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்துள்ளோம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.” என தெரிவித்தார்.

தனது கருத்துக்களைத் தெரிவித்த Union Assurance நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, “Union Assurance இலங்கை மக்களால் பாரம்பரிய வாழ்க்கை முறைகளுக்கு அப்பாற்பட்டு உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஒரு காப்பீட்டாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ‘Suwamaga’ நிகழ்ச்சித்திட்டம், அதை இன்னும் யதார்த்தமாக்குகிறது, அவசர சுகாதார பிரச்சனைகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் மற்றொரு பெரிய படியாக குறிப்பிடலாம். இதன் மூலம் இன்றைய சமூகத்தில் Silent Killer என அடையாளம் காணப்பட்டுள்ள சர்க்கரை நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதன் மூலம், சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையில் நீரிழிவு நிலைமையை திறம்பட கட்டுப்படுத்துவதற்கான நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றோம்.” என தெரிவித்தார்.

Union Assurance தொடர்பாக

இலங்கையின் முதலாவது தனியார் துறை காப்புறுதி நிறுவனமான Union Assurance, கடந்த 37 வருடங்களில் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்காற்ற முடிந்துள்ளது. புத்தாக்கமான நிதி மற்றும் சுகாதார சேவை தீர்வுகள் மூலம் மக்களின் வாழ்க்கையை உயர்த்த அர்ப்பணித்துள்ள Union Assurance, அதன் சமூக பாதுகாப்பு திட்டங்களின் மூலம் மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு இலங்கையருக்கும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான பலத்தையும் நம்பிக்கையையும் வழங்குவதற்காக உழைத்த நிறுவனம், மக்களுக்கும் நாட்டுக்கும் நிலையான பெறுமதியை சேர்க்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...