மின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டெஸ்லா, தற்போது அதன் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் உற்பத்தியை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துக்கள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவை டெஸ்லா நிறுவனத்தின் விற்பனையில் கணிசமான சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலைக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், நிறுவன வருவாயை மீட்டெடுக்க மலிவு விலையில் மின்சார வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் $22.5 பில்லியனாக குறைந்துள்ளதோடு, நிறுவனத்தின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிகம் விற்பனை செய்யப்படும் Model Y SUV கார் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் அறிமுகமாகினாலும், அது வருவாயை பெரிதாக உயர்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.