பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.
1600 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நல்லதொரு வரலாறு இல்லை என்றும் இலங்கை தமிழ் மக்களுக்குச் சொந்தமானதா அல்லது சிங்கள மக்களுக்குச் சொந்தமானதா என்பதை வரலாறு கற்பிக்கிறது என்றும், இதை மக்களின் தலையில் திணிக்கக்கூடாது என்றும் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தினார்.
தேவைப்பட்டால் மட்டுமே அந்தப் பாடங்களை விருப்பப் பாடமாகக் கற்பிப்பது போதுமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நேற்று (24) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.