follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP105 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

Published on

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார்.

இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் டஷோ கர்மா ஹமு டோர்ஜி, (கொழும்பைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் சேர்ஜி விக்டோரோவ், (புதுடில்லியைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் அலம் வோல்டெமரியம், மற்றும் (இஸ்லாமாபாத்தைச் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் அலிஷர் துக்தயேவ் ஆகியோருடன் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

இந்த சந்திப்பானது பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடனான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

பிரதமருடனான இந்த கலந்துரையாடலில் அனைத்து தூதுவர்களையும் வரவேற்ற பிரதமர், பரஸ்பர நலன்கள், நிர்வாகத்தில் ஒத்துழைப்பு, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

ஆடை உற்பத்தி, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ஏற்றுமதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் துறை விரிவாக்கம் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...