ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 13 இலட்சத்து 13, 232 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இது 21.4 சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில், இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியா, நெதர்லாந்து, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.