follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் புயல்

புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் புயல்

Published on

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை இன்று (30) மாலை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பாக வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...