follow the truth

follow the truth

February, 14, 2025
Homeவணிகம்HNB Finance இன் "வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

Published on

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “வளர்ச்சிக்கான நிதியறிவு” திட்டத்தின் மற்றொரு கட்டத்தை அண்மையில் நடத்தியது.

HNB Financeநிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறை கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டங்களின் மூலம், நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோரின் நிதியறிவு மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க முடிந்தது.

HNB Financeஇன் திறன் அபிவிருத்தித் துறைத் தலைவர் திரு. அனுர உடவத்த, இந்தத் தொடர் நிதியறிவு நிகழ்ச்சிகளை நடத்தினார், இதில் நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் வணிகக் கணக்கு பராமரிப்பு, கடன் நிர்வகிப்பு, இலாபத்தின் ஒரு பகுதியை மீள் முதலீடு செய்தல், வணிக செலவு நிர்வகிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டனர்.

சமீபத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொழில்முனைவோர்களில் மிகவும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை முன்வைத்த தொழில்முனைவோருக்கு பரிசுகளை வழங்கவும் HNB Finance நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர, இந்நிறுவனம் உருவாக்கிய “வளர்ச்சிக்கான நிதி அறிவு” கையேடு இங்கு வந்த அனைத்து தொழில்முனைவோருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“HNB Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் கூறுகையில், “நிதியறிவு என்பது எந்தவொரு வணிகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். நிதி அறிவு இல்லாமல் வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. இந்நிலையைப் புரிந்துகொள்வது, குறிப்பாக நுண் மற்றும் சிறு வணிக சமூகம் கடந்த சில ஆண்டுகளாக நிதியறிவு மற்றும் வணிகத்தை நிலையான முறையில் நடத்தும் திறனை அதிகரிக்க அதிக பங்களிப்பை அளித்துள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்திலிருந்து தற்போது வரை தொழில்முனைவோருக்கு நிதி அறிவை மிகவும் முறையாக வழங்க முடிந்துள்ளது. மேலும், ஒரு நிறுவனமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு அல்லது அதற்கு அப்பால் அந்தத் தொழில்களை எடுத்துச் செல்ல, சிறிய நிறுவனங்களைத் தொடங்க, செயல்பாட்டு மூலதனத்தை வழங்குவதில் இருந்து ஒவ்வொரு ஆதரவையும் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையுடன் கைகோர்க்கிறது இந்தியாவின் இந்துஸ்தான் பெற்றோலியம் லூப்ரிகண்ட்ஸ்

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ...

பிரவுன்ஸ் Agri விவசாயிகளுக்கு புதிய TAFE உழவு இயந்திர மாடல் Dyna ரக்ரர் மற்றும் ஃபுல்-ஆப்ஷன் சுமோ ரைஸ் மில் வழங்கல்

இலங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலில் முன்னோடியாக விளங்கும் பிரவுன்ஸ் அக்ரிகல்ச்சர்,...

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...