follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி கையெழுத்து

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி கையெழுத்து

Published on

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்ள தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை இன்று (13) ஆரம்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தற்போதைய சபாநாயகர் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்பபத்திலும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும், சபாநாயகராக பதவியேற்ற பின்னரும், அவருக்கு இல்லாத மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் BSc பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும், இது தொடர்பில் மக்களிடம் இருந்து ஆட்சேபனை எழுந்த சந்தர்ப்பத்திலும், இது தொடர்பான தகவல் கேட்ட போது மௌனம் காத்து, உண்மையை மறைத்துள்ள காரணங்களினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...