follow the truth

follow the truth

August, 7, 2025
HomeTOP1பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

Published on

பாராளுமன்றம் நாளை (17) மு.ப 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் இடம்பெறவிருப்பதுடன், இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (16) பிரதி சபாநாயகர் வைத்திய கலாநிதி ரிஸ்வி சாலி தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்களில் திருத்தங்கள் சில இங்கு மேற்கொள்ளப்பட்டன.

டிசம்பர் 17ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் 9.45 மணி வரை புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் பெயரிடப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவரும், புதிய ஜனநாயக முன்னணியினால் பெயரிடப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு பதவிச்சத்தியம் செய்யவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தெரிவுக்காகவும், அதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மு.ப 11.00 மணி முதல் பி.ப 3.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2024.12.18ஆம் திகதி மீண்டும் இந்த விவாதம் தொடரவுள்ளது. இதற்கு அமைய முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது.

இதன் பின்னர் பி.ப 3.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 முதல்நாள் ஒத்திவைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு பற்றிய விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய முன்னர் தீர்மானிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட விடயங்களை பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5. 00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...