follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்2011க்கு பிறகு மிக மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா - விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கை

2011க்கு பிறகு மிக மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா – விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கை

Published on

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...