follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉலகம்ஹசினாவுக்கு எதிராக மீண்டும் பிடியாணை

ஹசினாவுக்கு எதிராக மீண்டும் பிடியாணை

Published on

நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக பங்களாதேஷ் நீதிமன்றம், இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது.

பலர் காணாமல்போன விவகாரத்தில் ஹசினாவுக்கும் தொடர்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹசினாவின் 15 ஆண்டு கால ஆட்சியின்போது பேரளவில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் முன்னெடுத்த புரட்சியால் ஆட்சியை இழந்த 77 வயது ஹசினா கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பியோடினார். மனித நேயத்திற்கு எதிராகக் குற்றமிழைத்ததாகக் கூறி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதன் அடிப்படையில் அவரைக் கைதுசெய்ய ஏற்கனவே ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள்...

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு...

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அல்-காதிர் பல்கலைக்கழக திட்ட அறக்கட்டளை தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்...