follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1நன்றி செலுத்துதல் என்ற பாடத்தை கற்பிக்கும் தைப்பொங்கல் - எதிர்க்கட்சித்தலைவர்

நன்றி செலுத்துதல் என்ற பாடத்தை கற்பிக்கும் தைப்பொங்கல் – எதிர்க்கட்சித்தலைவர்

Published on

தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. தைப்பொங்கலின் உண்மையான பொருளை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

விவசாய வாழ்க்கை முறையில், ஒருவரின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் வலுப்படுத்தி, பயிர்களை செழிப்பாக்க உதவிய சூரியன், மழை, இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், நன்றி செலுத்துதல் என்ற பெரிய பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனை எதிர்கால சமுதாயத்தில் முறையாக உள்வாங்குவது நமது பொறுப்பாகும்.

ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம்.

ஆரம்பத்தில் விவசாய சமூகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த விழா, இன்று இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களின் தேசிய விழாவாக மாறியுள்ளது.

பல்மத, பல்லின, பல்மொழி சமூகம் கொண்ட நமது தாய்நாட்டில், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றொரு தேசிய விழாவாக தைப்பொங்கல் விழாவை ஒன்றிணைந்து கொண்டாடுவது நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர சகோதரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...