follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Published on

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்தது.

குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன சமர்ப்பித்தார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யூ.பி. கரலியத்தவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தத் திட்டம் தொடர்பான பல முக்கியமான வழக்குகள் எதிர்வரும் மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...