follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 29, 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் காலை 06.00 மணி முதல் மாலை 12.00 மணி வரை ஒத்திகை பணிகள் நடைபெறும் என்பதால், இந்த போக்குவரத்து திட்டம் கொழும்பு போக்குவரத்து பிரிவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு இணங்க கருவாத்தோட்டம், விஜயராம மாவத்தை, வித்யா மாவத்தை, பக்கமாக உள்நுழைதல், கருவாத்தோட்டம் பௌத்தாலோக மாவத்தையின் மெய்ட்லேன்ட் பிளேஸிற்கு நுழைதல்,

கருவாத்தோட்டம் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, இலங்கை மன்றக் கல்லூரி வீதியின் பகுதிற்கு உள் நுழைதல், கருவாத்தோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தின் சுதந்திர சதுக்க பகுதிக்கு நுழைதல்,

கருவாத்தோட்டம் ஹோட்டன் பிளேஸ், மெய்ட்லேன்ட் க்றஸென்ட் சந்தியில் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திற்கு நுழைதல், கருவாத்தோட்டம் ஆர். ஜி சேனாநாயக்க மாவத்டதையின் மெய்ட்லன்ட் க்றஸென்ட் ஊடாக சுதந்திரசதுக்க சுற்று வட்டத்திற்கு நுழைதல் மற்றும் கருவாத்தோட்ட சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தின் ஊடாக மெய்ட்லென் க்றஸென்ட் பகுதிக்கு நுழைதல் போன்ற வீதிகளில் ஒத்திகை நடைபெறும் காலப்பகுதியில் வீதி மூடப்படுவதுடன், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அப்பகுதிகளில் செல்லும் அரச மற்றும் தனியார் வாகனங்கள் ஒத்திகைக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...