follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP1"மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு ஒரு விபத்து" - இந்தியாவின் கண்டனத்தை அடுத்து இலங்கை விளக்கம்

“மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு ஒரு விபத்து” – இந்தியாவின் கண்டனத்தை அடுத்து இலங்கை விளக்கம்

Published on

காரைக்கால் மீனவர்கள் இருவர்மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் காரைக்கால் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லியில் உள்ள பதில் இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளத் தக்க விடயமல்ல எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பான பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை எனவும் அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய அரசின் கண்டனத்துக்கு விளக்கமளித்துள்ள இலங்கை அரசு, விபத்தாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாகவும், இதில் காயமடைந்த இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரே முதலுதவி செய்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 வரவு செலவுத்திட்ட இறுதி கட்டம் தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத்...

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

ஹொரணை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இன்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி...