follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2நேருக்கு நேர் மோதிய பயணிகள் விமானமும் ஹெலிகாப்டரும்

நேருக்கு நேர் மோதிய பயணிகள் விமானமும் ஹெலிகாப்டரும்

Published on

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சுமார் 60 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முன்னர் ஹெலிகொப்டர் ஒன்றுடன் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது. விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்ஏஏ) கூறுகையில், பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 ஜெட் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகாப்டருடன் மோதியது.

இந்த விபத்து தொடர்பாக எஃப்ஏஏ மற்றும் என்டிஎஸ்பி விசாரணை நடத்தும் என்றும் என்டிஎஸ்பி விசாரணையை வழிநடத்தும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்து சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்;

” விபத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒட்டுமொத்த டிரம்ப் நிர்வாகத்தின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும்..” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

சட்டவிரோதமாக தங்கியுள்ள​ 19 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்

பிரிட்டனில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம்...