follow the truth

follow the truth

February, 14, 2025
HomeTOP1காலி ஹினிதும துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி 

காலி ஹினிதும துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி 

Published on

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஹினிதும பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோகத்தை நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட நாளாந்த மின்வெட்டை முடிவுக்குக்...

குசல் மெண்டிஸ் சதம் விளாசினார்

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். இலங்கை மற்றும்...

மனுஷவின் மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

தென் கொரிய விசா சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி...