follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

Published on

தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான மேலதிக பணிக்குழாமினரை குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதன் மூலமும் மற்றும் தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்வதன் மூலமும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...