follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்ஜோர்தான் - எகிப்து இவ்வாரத்துக்குள் முடிவு சொல்ல வேண்டும் - இல்லையேல் அமெரிக்க உதவிகள் நிறுத்தப்படும்

ஜோர்தான் – எகிப்து இவ்வாரத்துக்குள் முடிவு சொல்ல வேண்டும் – இல்லையேல் அமெரிக்க உதவிகள் நிறுத்தப்படும்

Published on

இஸ்ரேலிய தாக்குதல்களால் சின்னாபின்னமாகியுள்ள காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அப்பகுதியை முன்னேற்ற தங்களிடம் திட்டங்கள் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த முடிவு அரேபிய நாடுகள் பல தங்கள் எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் படி சுமார் 2 மில்லியன் பலஸ்தீனியர்களை ஜோர்தான் மற்றும் எகிப்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

இதற்கிடையில்தான் ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பொன்று வெள்ளை மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பொழுதும் பாலஸ்தீனியர்கள் தொடர்பான தனது திட்டத்தை மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் மன்னர் அப்துல்லாவிடம் வலியுறுத்தினார்.

ஆனால் பலஸ்தீனியர்களை தங்கள் நாட்டுக்குள் உள்வாங்க நேரடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை அவரது சமூக வலைதள பதிவுகள் உறுதி செய்துள்ளன.

குறிப்பாக ஜனாதிபதி ட்ரம்பை பகைத்துக்கொள்ள விரும்பாத மன்னர் அப்துல்லாஹ் ஊடகங்களிடம் பேசுவதையும் கடுமையாக தவிர்த்துள்ளார்.

எவ்வாறாயினும் தங்கள் ஜோர்தான் நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதனையே தாங்கள் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜோர்ந்தான் மற்றும் எகிப்து பலஸ்தீன் மக்களை அழைத்துக்கொள்வது தொடர்பான தங்கள் முடிவை இந்த வாரத்துக்குள் சொல்லாவிட்டால் அமெரிக்காவினால் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் இரு நாடுகளுக்கும் நிறுத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று...