follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP2அர்ச்சுனாவை கைது செய்ய பொலிசாருக்கு பயமா?

அர்ச்சுனாவை கைது செய்ய பொலிசாருக்கு பயமா?

Published on

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவல்துறை ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி – அவர் இன்னும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது சலுகைகளை அனுபவித்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டாரா? பொலிஸ் அவரை கைது செய்ய மாட்டேங்குதா? அவரை கைது செய்ய பயப்படுகிறீர்களா?

பதில் : “பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது. அவர் மிக உயர்ந்த சபையின் நபர். அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான். காவல்துறையினர் தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ளவேண்டும். எனவே அந்த வகையில் செயல்படுவது அவரது கடமை. இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். எதிர்காலத்தில் நாம் பார்ப்பது போல, அந்த சம்பவம் தொடர்பாக இலங்கை காவல்துறை தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படும்.”

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனின் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் தற்போது யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...