மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் நீதிமன்ற நுழைவாயிலில்ஸ்கேனர் இயந்திரத்தைக் கடந்து நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் இன்று (20) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.