follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுசஞ்சீவ கொலை சம்பவம் - ரிவோல்வர் கொண்டுவந்த பெண்ணுடன் தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி கைது

சஞ்சீவ கொலை சம்பவம் – ரிவோல்வர் கொண்டுவந்த பெண்ணுடன் தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி கைது

Published on

புதுக்கடை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தில் நீதிமன்றத்துக்கு ரிவோல்வரை கொண்டுவந்த பெண்ணோடு தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் கீழ் நீதிமன்றப் பணியில் நியமிக்கப்பட்ட பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸ் அதிகாரி பாதெனியவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா சேவ்வந்தி என்ற பெண்ணுடன் இந்த பொலிஸ் அதிகாரி தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸ் அதிகாரி CCDக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...