follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2"கொலையாளியை வீரனாக்கி 'லவ் க்ரஷ்' ஆக்கிவிட்டீர்கள் - முறையான விசாரணை வேண்டும்"

“கொலையாளியை வீரனாக்கி ‘லவ் க்ரஷ்’ ஆக்கிவிட்டீர்கள் – முறையான விசாரணை வேண்டும்”

Published on

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. குற்றவாளியை 8 மணித்தியாலங்களில் கைது செய்தமை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் குற்றவாளியான பெண்ணை கைது செய்யவில்லை. இருவரும் நீர்கொழும்புக் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். இதில் துப்பாக்கி சூடு நடத்தியவரை தான் நீங்கள் கைது செய்தீர்கள்.. ஆனால் ஊடகங்களில் நேற்று இரவு செய்திகளில் தெரிவித்திருந்ததன்படி. துபாயில் இருந்து துப்பாக்கிசூடு நடத்தியவரை காட்டிக்கொடுத்ததால் தான் அவரை கைது செய்ததாகவும் நமது திறமையால் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊடகங்களில் அப்படித்தான் கதை இருந்தது.. ஏனெனில் இன்னும் மீதமுள்ள குற்றவாளிப் பெண்ணை கைது செய்ய முடியவில்லையே?

அடுத்தது தான், என்னதான் செய்தாலும், சந்தேக நபரை நாட்டுக்கு வீரராக புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கி பிரசித்தம் அடைய செய்தீர்கள்.. அப்படி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் அமைச்சரே இது குறித்து சிந்தியுங்கள். பாருங்களேன், கைது செய்தவுடனேயே கைகளை பிடித்துக் கொண்டு லவ் பண்ணுறது போல போஸ் குடுத்திட்டு இருக்கிறான்.. இது பிழை, யார் செய்த வேலை இது? இப்படிப்பட்ட குய்ற்றச்செயல்கள் புரிந்துள்ள கொலையாளியை லவ் பண்ணுறது போன்று தானே வேனில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களில் இருக்கிறார்.. என்னமோ பெரிய வீரதீர செயலை செய்தவர் போல.. அது குறித்து விசாரணை வேண்டும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...