வெளிநாட்டிலிருந்து இயங்கும் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவித்ததாக கூறப்படும் ஒரு நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து செயல்படும் பிரமிட் முதலீட்டு திட்டம் ஒன்றை இந்நாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு இந்த நபர் பங்களித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதன் கீழ் சுமார் ஐயாயிரம் பேர் இந்த முதலீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.