OnmaxDT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக டுபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலகவை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது.
டுபாயில் கைது செய்யப்பட்டு இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.