follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு (படங்கள்)

டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு (படங்கள்)

Published on

ஒரு கோழிக் குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருதற்கு தயாரான நிலையில் இருந்த டைனோசர் முட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தென் சீனாவின் கான்சு நகரிலேயே இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு இது குறைந்தது 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டை கரு பல்லில்லாத தொரோபாட் டைனோசர் அல்லது ஓவிராப்டோரோசர் டைனோசரினுடையது என்று நம்பப்படுகிறது. இந்த முட்டைக் கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயரிடப்பட்டுள்ளது.

“வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த டைனோசர் முட்டைக் கரு இதுவாகும்” என்று ஆய்வாளரான வைத்தியர்  பியோனா வைசும் மா தெரிவித்துள்ளார்.

டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக் கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டுள்ளது. குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Meet 'Baby Yingliang', a well-preserved dinosaur embryo discovered inside fossilised egg | Technology News,The Indian ExpressWell-preserved dinosaur egg discovered in China - AKIpress News Agency

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...