follow the truth

follow the truth

March, 28, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன - தேசிய பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள்

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன – தேசிய பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள்

Published on

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும்.

மிலேச்ச கொலையாளிகளின் இந்தச் செயல்கள் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றன. புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப் பெற்ற பிறகு அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க இதைவிடவும் முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் உருவாக்கப்படும்

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி...

“சுப நேரத்துக்கு நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் பழகிக் கொள்ளுங்கள்..”

சுப நேரத்துக்கு நாட்டை அநுரவிடம் கொடுத்து விட்டு தற்போது வாழ்வதற்கு நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய...

தேர்தல் தொடர்பில் ஜீவன் தொண்டமான் நீதிமன்றுக்கு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச்...