follow the truth

follow the truth

March, 26, 2025
Homeஉள்நாடுஎதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை

Published on

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கமைய, தேவையான பாதுகாப்பை வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும், உறுப்பினர்களுக்குக் காணப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தற்போது ஆராய்ந்து இறுதி அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவையெனின், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், பிரதானமாக போதைப்பொருள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படும் இந்தப் பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கைது செய்து, நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது – வௌிவிவகார அமைச்சு

முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் அது தொடர்பான விபத்துகளைக் குறைப்பது குறித்து பொலிஸ்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று(26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இலவசக்கல்வி இணைமருத்துவ விஞ்ஞானப் பட்டதாரிகளை தவிர்த்து...